தேர்தல் தினத்தன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. 

வாக்காளரின் வேலைத்தளத்திலிருந்து வாக்குச்சாவடியின் தூரம் 40 கிலோமீற்றர்கள் அல்லது அதற்கு குறைவாக இருப்பின் அரை நாள் விடுமுறையும் 40 கிலோ மீற்றருக்கும் 100 கிலேமீற்றருக்கும் இடைப்பட்டதாயின் முழு நாள் விடுமுறையும் 100 கிலோ மீற்றரிலிருந்து 150 கிலோ மீற்றர்களாகக் காணப்பட்டால் ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோமீற்றருக்கு அதிகமாக காணப்படுமாயின் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவடைந்துள்ள நிலையில், இது வரையில் தமக்கான வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாத வாக்காளர்கள் அவற்றை அருகிலுள்ள தபால் காரியாலயங்களில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.