கொக்கட்டிச்சோலை - முனைக்காடு பகுதியில் இன்று  காலை 1௦ மணியளவில்  கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று கிராம மக்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

முனைக்காடு மாதிரி பண்ணைக்கு பின்னால் உள்ள சதுப்பு நில பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே மக்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார்  கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பெரும் தொகையான பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை  மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தகது.