சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிரியாவின் கௌட்டா  மாவட்டத்தில் போராளிக் குழுவினருக்கு எதிராக நேற்று  இவ் விமானத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை மேற்படி பகுதியில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மோதல் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கௌட்டா மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள போராளிக் குழுவினருக்கு எதிரான மோதலை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.