தெற்கு அமெரிக்க நாடான பெருவில் உள்ள அகாரி நகரின் தென்மேற்கு பகுதியில் நேற்றிரவு 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அகாரி நகரில் இருந்து தென்மேற்கு திசையில் சுமார் 57 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் பொதுவாக நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமானதாகும். கடந்த 10 நாட்களில் இப்பகுதியில் 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் குறைந்த அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.