கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெஹெல்பத்தர, உடுகம்பள பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கிசூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.