தேர்தல் தோல்­வியை தவிர்த்­துக்­கொள்­ளவே அலோ­சி­யஸை கைது­செய்­துள்­ளனர்.!

Published By: Robert

06 Feb, 2018 | 09:42 AM
image

அர­சாங்கம் தேர்தல் தோல்­வியை தவிர்த்­துக்­கொள்­ளவே அலோ­சி­யஸை கைது­செய்­துள்­ளது. அத்­துடன் தேர்­தலில் அடையும் தோல்­வி­யுடன் அர­சாங்கம் இராஜி­னாமா செய்­ய­வேண்டும் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோஷ­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

தபால் மூல வாக்­க­ளிப்பில் அர­சாங்­கத்­துக்கு பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தாக கிடைக்­கப்­பெறும் தக­வல்­களை கருத்­திற்­கொண்டு அர­சாங்கம் பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது. அதன் பிர­கா­ரமே மக்­களின் கவ­னத்தை அர­சாங்­கத்தின் பக்கம் திசை திருப்­பும் ­நோக்­கத்தில் திடீ­ரென மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­கா­ரத்தில் அர்ஜுன் அலோ­சியஸ் மற்றும் பலி­சேன ஆகி­யோரை கைது­செய்­துள்­ளனர். 

அத்­துடன் இவர்­களை 2016ஆம் ஆண்டே கைது­செய்­தி­ருக்­க­வேண்டும் என அர­சாங்­கத்தில் இருக்கும் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­விக்­கிறார். அப்­ப­டி­யாயின் இவர்கள் கைது­செய்­யப்­ப­டு­வதை யார் தடுத்து வந்­தார்கள். அத்­துடன் பிணை­முறி தொடர்­பான கோப்­குழு அறிக்கை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போது, அது தொடர்­பாக விவா­திக்­கப்­பட்­டது. இதன்­போது பிர­த­மரிடம் பல கேள்­விகள் முன்­வைக்­கப்­பட்­டன. இவற்­றுக்கு பதி­ல­ளிக்­காமல் பிர­தமர் அறிக்­கையை சட்­டமா அதி­ப­ருக்கு கைய­ளித்­தி­ருப்­ப­தாக அன்று தெரி­வித்தார். அறிக்கை கைய­ளிக்­கப்­பட்டு இவ்­வ­ளவு காலமும் சட்­டமா அதிபர் அது­தொ­டர்­பாக ஏன் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தவ­றினார் என்­பதை பிர­தமர் பகி­ரங்­க­மாக அறி­விக்­க­வேண்டும்.

மேலும் அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்து 3 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் மக்­க­ளுக்கு எத­னையும் செய்­ய­வில்லை. இதனால் மக்கள் அர­சாங்­கத்தின் மீது விரக்­தி­ய­டைந்­துள்­ளனர். மக்கள் தங்­களின் வெறுப்பை தேர்தல் ஊடாக வெளிப்­ப­டுத்­து­வார்கள். தேர்தலில் அர­சாங்கம் பாரி­ய­தொரு தோல்­வியை அடை­வது உறு­தி­யாகும். தேர்­தலில் மக்­களின் ஆணையை மதித்து அர­சாங்கம் இராஜி­னாமா செய்­ய­வேண்டும்.

அத்­துடன் இந்த தேர்­தலில் அர­சாங்கம் வீழ்த்­தப்­ப­டா­விட்டால் மக்­களின் வாழ்க்­கையும் அரச வளங்­களும் அழிந்­து­விடும். அர­சாங்­கத்தின் தற்­போ­தைய நட­வ­டிக்­கை­க­ளுக்கு மக்கள் அனுமதி அளித்ததுபோன்றாகிவிடும். நாட்டின் ஏனைய அரச வளங்களையும் விற்பனைசெய்ய சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்துவார்கள். எனவே மக்கள் தங்கள் எதிர்காலத்தையும் நாட்டின் வளங்களையும் பாதுகாத்துக்கொள்ள இந்த தேர்தலுடன் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58