நிதி மோசடி தொடர்பில் பொலிஸாரால் இன்று மீண்டும் கைதுசெய்யப்பட்ட ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாரால் இன்று மீண்டும் கைசெய்யப்பட்டார்.

இதையடுத்து பதுளை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அவரை ஆஜர்படுத்தியதையடுத்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நிதிமோசடி குற்றச்சாட்டில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி, நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று மீண்டும் கைதாகி பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.