2018ஆம் ஆண்­டுக்­கான அம்­பாறை மாவட்ட பட்மிண்டன் போட்­டிகள் சம்­மாந்­துறை விளை­யாட்டு
கட்­டட தொகு­தியில் நேற்று முன்­தினம் நடை­பெற்­றன.இப்போட்­டி­களில் அம்பாறை மாவட்­டத்தை சேர்ந்த பிர­தேச செய­லக பட்மிண்டன் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்­கேற்­றன. அம்­பாறை மாவட்ட விளை­யாட்­டு­த்துறை அ­தி­காரி வே.ஈஸ்­வரன் தலை­மையில் நடை­பெற்ற இவ் விளை­யாட்டுப் போட்­டி­களின் இறு­தியில் மக­ளி­ருக்­கான போட்­டியில் காரை­தீவு பிர­தேச செய­லக அணி முத­லி­டத்­தையும் கல்­முனை தமிழ் பிர­தேச செயலக அணி இரண்­டா­மி­டத்­தையும் பெற்­றுக்­ கொண்­டன.அதேபோல் ஆண்­க­ளுக்­கான போட்­டி­களில் கல்­முனை–சம்­மாந்துறை பிர­தேச செயலக அணி முத­லி­டத்­தையும் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக அணி இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.