ஈரானில் நடை­பெற்ற எட்­டா­வது ஆசிய உள்­ளக விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்கை தங்­கப்­ப­தக்கம் உட்­பட 3 பதக்கங்­களை வெற்­றி­கொண்­டது.
இதில் 1500 மீற்றர் ஓட்டப் போட்­டியில் கலந்­து கொண்ட கயந்­திகா இலங்கைக்­கான தங்­கப்­ப­தக்­கத்தைவென்று கொடுத்தார்.அதே­வேளை பெண்­க­ளுக்­கான 400 மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் உப­ மா­லிகா ரத்­ன­கு­மாரி வெண்கலப் பதக்­கத்தை வென்றார்.கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற மக­ளி­ருக்­கான 800 மீற்றர் ஓட்டப் போட்­டியில் நிமாலி வென்ற வெண்­கலப் பதக்­கத்­துடன் இலங்கை அணி மூன்று பதக்கங்­களை வென்­றது.இந்த உள்­ளக விளை­யாட்டுப் போட்­டி­களின் கடைசி நாளான நேற்று முன்தினம் நடை­பெற்ற மக­ளி­ருக்­கான 1500 மீற்றர் ஓட்டப் போட்­டியில் கயந்­திகா பந்­தயத்தூரத்தை 4:26:83 வினா­டி­களில் கடந்து முத­லி­டத்தைப் பிடித்து தங்­கப்­ப­தக்­கத்தை வென்றார். கயந்­தி­கா­வுக்கு கடும் போட்­டி­யாக விளங்­கிய கஸகஸ்தான் நாட்டு வீராங்­கனை டட்­யானா நரோஸ்னக் 4:28:20 வினா­டி­களில் போட்­டியை முடித்து இரண்­டா­வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்­கத்தை வெற்­றி­கொண்டார். மூன்­றா­வது இடத்தைப் பிடித்த  வியட்நாம் வீராங்­கனை தாய் ஓன் நிகுயென்  வெண்­கலப் பதக்­கத்தை வென்றார். இவர் பந்­தயத் தூரத்தை 4:28:87 வினா­டி­களில் ஓடி முடித்தார்.