ஜனாதிபதியை சந்தித்தார் இளவரசர் 

Published By: Priyatharshan

05 Feb, 2018 | 02:08 PM
image

70 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொள்வதற்கு இலங்கை வந்திருந்த இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

தேசிய சுதந்திர தினக்கொண்டாட்ட நிகழ்வைத் தொடர்ந்து இச்சந்திப்பு இடம்பெற்றது. 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவும் அவரது பாரியாரும் இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சொபி ஆகியோரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பையேற்று சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வில் பங்குபற்றியமைக்காக எட்வர்ட் இளவரசருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, 1954 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரித்தானிய மகாராணியின் இலங்கைக்கான விஜயத்தையும் இளவரசர் சார்ள்ஸ் உள்ளிட்ட பிரித்தானிய அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இதற்கு முன்னரும் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள விஜயங்கள் குறித்தும் நினைவுபடுத்தினார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் பிரித்தானியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகள் சிறப்பாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிரித்தானிய அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையமான விக்டோரியா நீர்த்தேக்கம் இன்று இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவருவதாகக் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு தாம் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இரண்டாவது எலிசபெத் மகாராணியை சந்தித்த வேளையில் தனக்கு வழங்கப்பட்ட மனப்பூர்வமான வரவேற்பை ஜனாதிபதி நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இளவரசர் எட்வர்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள கிடைத்ததையிட்டு குறிப்பாக 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்குபற்றக் கிடைத்ததையிட்டு தான் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ஆற்றிய உரையைப் பாராட்டிய இளவரசர் எட்வர்ட் ஒரு தேசத்தின் எதிர்காலம் எப்போதும் அத்தேசத்தில் கற்றவர்கள் அதிகரித்திருப்பதிலேயாகும் என்றும் கல்விக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தற்காலத்திற்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதை நினைவுகூர்ந்ததுடன், இங்கிலாந்துக்கும் இலங்கைக்குமிடையில் கல்வித்துறையில் விசேட தொடர்புகள் உள்ளதாக தெரிவித்தார்.

இவ்வருடம் பிரித்தானியாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் மீண்டும் சந்திப்பதற்கும் அவர் இணக்கம் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடுகளினதும் தலைநகரங்கள் சுற்றாடல் நட்புடைய வகையில் நடைபாதைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்திலும் அத்தகைய நடைபாதைகளை அமைப்பதற்கான திட்டத்திற்கான அடையாளச் சின்னமொன்றை இளவரசர் எட்வர்ட் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38