மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்து வாக்குமூலங்களை பெற்றதையடுத்து, நேற்று இரவு கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து , அவர்களை இன்றைய தினம் காலை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனையும் சந்தேக நபராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலதிக செய்திகளுக்கு அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேன ஆகியோருக்கு விளக்கமறியல்

                                              அர்ஜுன் அலோஷியஸ், கசுன் பலிசேன கைது