சிட்டகொங்கில், இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிந்தது.

முதல் இனிங்ஸில் பங்களாதேஷ் சேகரித்த 513 ஓட்டங்களுக்கு பதிலாக இலங்கை அணி அதன் முதல் இனிங்ஸில் 713 ஓட்டங்களைக் குவித்தது.

இரண்டாவது இனிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் ஐந்தாவது நாள் ஆட்ட நிறைவின்போது ஐந்து விக்கட்களை இழந்து 307 ஓட்டங்களைச் சேகரித்தது. இதன்மூலம், ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பங்களாதேஷ் அணியின் வீரர் மொமினுல் ஹக், இரண்டு இனிங்ஸிலும் முறையே 176 மற்றும் 105 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இதன்மூலம், ஒரே போட்டியின் இரண்டு இனிங்ஸிலும் சதம் அடித்த பங்களாதேஷ் அணியின் முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.