நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 544 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், சிறு சிறு குற்றங்களுக்காகச் சிறையில் வாடும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 544 கைதிகளே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் எச்.எம்.டி.என்.உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, அனுராதபுரம், களுத்துறை, நீர்கொழும்பு, மஹர ஆகிய சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.