மூன்று முறை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து, ஐந்து இலட்சத்தில் ஒருத்தி என்ற பெருமையை (!) பெற்றிருக்கிறார் மிஸ்ட்டி லேங் (35)! இவரும் இரட்டைக் குழந்தையாகப் பிறந்தவரே!

மிஸ்ட்டி லேங்குக்கும் முன்னாள் கணவருக்கும் ஒன்பது வருடங்களுக்கு முன் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதன் பின் விவாகரத்து செய்துகொண்ட மிஸ்ட்டி, மீண்டும் பீட்டிர் லேங் என்பவரை மணம் முடித்தார். இவர்களுக்கு ஏழு வருடங்களுக்கு முன் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

தன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்பதால், லேங்குக்கு அனேக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விருப்பம். அதன்படி மீண்டும் மிஸ்ட்டி ஒரு குழந்தைக்குத் தாயானார்.

அதையடுத்து இரண்டு முறை கருத்தரித்த அவர், இரண்டு முறையும் இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்தார்.

ஐந்து இலட்சம் பேரில் ஒருவருக்கே நிகழும் இந்த ஆச்சரியம் தனக்கு நிகழ்ந்திருக்கிறது என்று கூறி மகிழ்கிறார் மிஸ்ட்டி!