தமிழில் தேசிய கீதம் பாடி­ய­தன்­மூலம் தமிழீழ கீதம் பாடப்­ப­டு­வதை நிறுத்­தி­யுள்ளோம். இது அர­சாங்­கத்­துக்கு கிடைத்த பெரு வெற்­றி­யாகும் என ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்சி தலைமைக் காரி­யா­லயமான சிறி­கொ­த்தாவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டின் 68ஆவது சுதந்­திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது. இது­தொ­டர்பில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். இவர்கள் இதன் மூலம் மீண்டும் நாட்டில் இன­வா­தத்தை பரப்­பு­வ­தற்கே முயற்­சிக்­கின்­றனர். தமிழில் தேசிய கீதம் பாடப்­பட்­ட­மை­யா­னது புதிய விட­ய­மல்ல. 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேனா­நா­யக தலை­மையில் அன்று பாடப்­பட்­டது. அதன் பிறகு 2016ஆம் ஆண்டு பாடப்­பட்­டுள்­ளது. தமிழில் தேசிய கீதம் பாடி­ய­தன்­மூலம் வடக்கில் தமி­ழீழ கீதம் பாடப்­ப­டு­வது நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இது எமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்­றி­யாகும்.

அத்­துடன் நாட்டில் சிறு­பான்மை இனங்கள் மதிக்­கப்­ப­டு­வ­தில்­லை­யென்ற குற்­றச்­சாட்டு கடந்த காலங்­களில் சர்­வ­தேச நாடு­களில் இருந்து வந்­துள்­ளது. தற்­போது அந்த குற்­றச்­சாட்­டுக்­களும் இல்­லாமல் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. சர்­வ­தே­சமும் எம்­மீது நம்­பிக்­கை­வைத்து வரு­கின்­றது.

மேலும் தேசிய கீதத்தை தமிழில் பாடி­யதன் மூலம் எதிர்­கா­லத்தில் அரபு மொழி­யிலும் பாடக் கேட்­பார்கள் என மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். நாட்டில் 10 வரு­டங்கள் ஜனா­தி­ப­தி­யா­கவும் பிர­த­ம­ராகவும் மற்றும் பாரா­ளு­மன்­றத்தில் மூத்த அர­சியல் வாதி­யாகவும் இருந்த இவர் பாலர் பாட­சாலை மாணவன் போன்று கூறி­யி­ருப்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய மஹிந்த ராஜபக் ஷ, இந்த நாட்டில் சிறு­பான்மை இனத்­த­வர்கள் என்று எவரும் இல்லை. இங்கு எல்­லோரும் ஒரே மக்கள் என்று தெரி­வித்­தி­ருந்தார். இதன்­மூலம் சிறு­பான்மை மக்­களும் தங்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்­பி­னார்கள்.

ஆனால் சிறு­பான்மை மக்­க­ளுக்கு அவரால் எது­வுமே செய்ய முடி­ய­வில்லை. மாறாக இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகளையே ஏற்­ப­டுத்­தினார். சிறு­பான்மை மக்கள் நிம்­ம­தி­யற்று வாழக்­கூ­டிய நிலை­மையே கடந்த ஆட்­சியில் இருந்­தது. தற்­போது ஜனா­தி­ப­தியும் பிர­தமரும் சிறு­பான்மை மக்­களை மதித்து அவர்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்­து­வைக்­கும்­போது அதனை பொறுத்­துக்­கொள்­ள­மு­டி­யாமல் மஹிந்த ராஜபக் ஷ இன­வா­தத்தை தூண்டும் வகையில் கருத்து தெரி­வித்து வரு­கின்றார்.

அத்­துடன் இந்­தி­யாவில் கூட ஒரு மொழியில் தான் தேசிய கீதம் பாடப்­ப­டு­வ­தாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சினர் தெரி­விக்­கின்­றனர். தேசிய கீதத்­துக்கு இந்­தியாவை முன்­மா­தி­ரி­யாக எடுக்கும் இவர்கள் அதி­கார பர­வ­லாக்­கத்­துக்கு ஏன் இந்­தி­யாவை முன்­மா­தி­ரி­யாக எடுப்­பதை எதிர்க்­கின்­றனர்? இவர்கள் அனை­வரும் தங்­க­ளது சுய­ந­லத்­துக்­கா­கவே செயற்­ப­டு­கி­ன்­றனர்.

68 வரு­டங்கள் பின் தள்­ளப்­பட்­டுள்ள எமது நாட்டை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பொய்க்குற்றச்சா ட்டுக்களை தெரிவித்து மக்களின் வாழ்க்கையுடனும் பிள்ளைகளின் எதிர்காலத்துடனும் விளையாட வேண்டாம் என்றார்.