இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு மதவழிபாட்டு ஸ்தலங்களில் மத வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகள் காலை 6.30 மணிக்கு கொள்ளுப்பிட்டி பொல்வத்த தர்மகீர்த்திரா-ராம விகாரையில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்துமத வழிபாட்டு நிகழ்வு கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர்களான டீ.எம்.சுவாமிநாதன், பழனி திகாம்பரம், மனோ கணோசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு பற்றிமா தேவாலயத்தில் கத்தோலிக்க மத ஆராதனை  நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்து கொள்வார்.

இராஜங்க அமைச்சர் ஏரான் விக்ரமரட்னவின் பங்களிப்புடன் கிறிஸ்தவ தேவ ஆராதனை கொழும்பு வெல்ல வீதியிலுள்ள மெதடிஸ் தேவாயலத்தில் நடைபெறவுள்ளது.

விசேட துஆ பிரார்த்தனை கொழும்பு அக்பர் ஜூம்மா பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இதில் அமைச்சர்களான எம்.எச்.ஏ.கலீம், ரவூவ் ஹக்கீம், ரிசாத் பதியூதின், கபீர் ஹசிம் மற்றும் பைஸர் முஸ்தப்பா உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.