இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தின வைபவம் “ஒரே நாடு ”என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று காலை நடைபெறவுள்ளது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். 

பிரிட்டிஷ் அரச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இளவரசர் எட்வெட் மற்றும் அவரது பாரியார் விசேட அதிதிகளாக வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். 

சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு விசேட பிரதிநிகள் குழு சுதந்திர வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும். 

மூவாயிரத்து 500 உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பைவத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். பொதுமக்களால் இதனை பார்வையிடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர வைபவம் இன்று காலை 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

 

இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு, சுயாதீன தன்மை ஆகியவற்றுக்காக தமது உயிரை தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவு கூர்வதற்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி இடம்பெறவுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 21 மரியாதை வேட்டுக்கள் தீரக்கப்படும் நிகழ்வும் இடம்பெறும். 

 

ஜனாதிபதி இன்று 9.13 மணிக்கு பொதுமக்களுக்கு சுதந்திரதின உரையாற்றவுள்ளார். முப்படை, பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையணி மற்றும் தேசிய கெடற் அணி ஆகியன நடத்தும் மரியாதை அணிவகுப்பு மற்றும் கலாச்சார ஊர்வலமும் வைபவத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதக செய்திகளுக்கு இலங்­கையின் 70 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு நாளை : சகல ஏற்பாடுகளும் பூர்த்தி