இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் போபாலில் 25 வயது இளைஞரின் பிறப்புறுப்பை மர்ம நபர்கள் துண்டுத்து எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞருக்கு  இன்னும் 3 நாட்களில் திருமணம் நடக்கவுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலம் கழிப்பதற்காக அருகிலிருந்த ஆற்றுப்பகுதிக்கு சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத இரண்டு பேர் தாக்கியுள்ளனர். பின்னர் அவரின் பிறப்புறுப்பை துண்டித்து எடுத்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.