கொமன்வெல்த் போட்­டி­களில் இலங்கை பெட்­மிண்டன், சைக்கிள் ஓட்டம், கடற்­கரை கரப்­பந்­தாட்டம் மற்றும் ஜிம்­னாஸ்டிக் ஆகிய போட்டிப் பிரி­வு­களில் பங்­கேற்­காது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

எதிர்­வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கொமன்வெல்த் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

இதில் 13 போட்டிப் பிரி­வு­களில் இலங்­கை­யி­லி­ருந்து 82 வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்ற ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. 

இந்­நி­லையில் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட்ட விசேட குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையில், இலங்கை அணி பதக்கம் வெல்­லக்­கூ­டிய போட்டிப் பிரி­வு­களில் மட்டும் வீரர்­களை பங்­கு­பற்ற செய்­ய­வேண்டும் என்று  பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதன்­படி 49 வீரர்கள் வரை கொமன்வெல்த் போட்டிகளில் பங்குபற்ற முடியாமல் போய்விடும் என்றும் அறியக்கிடைக்கின்றது.