உலகின் முன்னணி உள்ளாடை உற்பத்தியாளரான டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற வருடாந்த விற்பனை மாநாட்டில் உயர் சாதனையாளர்களை கௌரவித்திருந்தது. 

கலதாரி ஹோட்டலின் பிரதான போல் ரூமினை திருவிழாக்கோலமாக மாற்றியமைத்த இந்த வருட மாநாடு பிரேசில் திருவிழா கருப்பொருளின் கீழ் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் டிரையம்ப் நிறுவனத்தின் நேரடி விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனை பங்காளர்கள், முக்கிய கணக்குப் பங்காளர்கள் மற்றும் முக்கிய பங்கு உரிமையாளர்கள் ஆகியோரின் உயர்  சாதனைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இதற்கு மேலதிகமாக, டிரையம்ப் நிறுவனம் அதன் புதிய வர்த்தக சின்னத்தையும் அறிமுகம் செய்து வைத்தது. 

இந்தியா மற்றும் இலங்கைக்கான டிரையம்ப் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஷலிந்த்ர பெர்னாண்டோ, 

உள்நாட்டு சந்தையில் புதிய வரையறைகள் மற்றும் தங்கள் இலக்குகளையும் எய்துவதற்கு இரவு பகல் பாராது கடுமையாக உழைத்த டிரையம்பின் சிறந்த செயற்பாட்டாளர்களின் முயற்சிகளை கௌரவித்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

“எமது நிறுவனத்தின் வளர்ச்சியில் எமது பங்காளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களது தனிப்பட்ட அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் நிலைபேறுதன்மை ஆகியன வர்த்தக குறியீட்டு இலங்கையில் அதன் தலைமைத்துவத்தை பேண வழிவகுத்துள்ளது. 

2016 ஆம் ஆண்டில் எமது விற்பனை படையினர் மற்றும் பங்காளர்கள் மென்மேலும் தமது பங்களிப்பை சிறப்பாக வழங்குவர் என நாம் எதிர்பார்க்கிறோம். டிரையம்ப் நிறுவனம், இந்த மாநாட்டினை அதன் எதிர்கால இலக்குகள் குறித்து தெரியப்படுத்தவும், அதன் பங்காளர்களை ஊக்குவிக்கவும் பயன்படுத்திக் கொண்டது’ என்றார்.

ஆசிய பெண்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட நெருக்கமான உள்ளாடைகளை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு செய்யும் ஒரேயொரு ஐரோப்பிய வர்த்தகநாமம் டிரையம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டில் உயர் சாதனையாளர்களை அடையாளப்படுத்த பயன்படுத்திய பொதுவான அளவுகோலே இம்முறையும் பயன்படுத்தப்பட்டிருந்தது. வெற்றியாளர்கள் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழங்கிய செயற்திறன் மற்றும் பங்களிப்பு போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

Key Account Partner 01 பிரிவில் Nolimit நிறுவனம் தங்க விருதை வென்றது. மேலும் வெள்ளி விருதை Glitz நிறுவனமும், Cool Planet நிறுவனம் வெண்கல விருதினையும் வென்றெடுத்தது. Key Account Partner 2 பிரிவில் தங்க விருதை Wijeya Group நிறுவனமும், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை முறையே Kandy Stores மற்றும் A.S.B Fashion (Pvt) Ltd ஆகியன வென்றிருந்தன. Key Account Partner 3 பிரிவில் பெஷன் பக் நிறுவனம் தங்க விருதையும், Beverley Street மற்றும் Andum Andum(Unique Trends (Pvt) Ltd) ஆகியன முறையே வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை தனதாக்கிக் கொண்டன.

இந் நிகழ்வில் வருடத்திற்கான மிகச்சிறந்த விநியோகஸ்தர் நிலையத்திற்கான தங்க விருதை செல்வி.எம்.ஜே.பெரேரா வென்றார். 

அதே பிரிவில், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை முறையே செல்வி.நலனி சந்திரமோஹன் மற்றும் செல்வி.ருக்லாந்தி தலகுணே ஆகியோர் வென்றெடுத்தனர். உயர் வருமானத்தை பதிவு செய்த வியாபார நிலையங்களுக்கான விசேட அங்கீகாரத்திற்கான தங்க விருதுகளை செல்வி.தீபா நக்தால் மற்றும் செல்வி.எம்.ஜே.பெரேரா ஆகியோர் வென்றிருந்தனர்.

 

வட மாகாணத்திற்கான ஆண்டின் சிறந்த விநியோகஸ்தருக்கான விருதை Sriyani Dress Point உம், தென் மாகாணத்திற்கான ஆண்டின் சிறந்த விநியோகிப்பாளருக்கான விருதை Thilakawardana Textiles உம் வென்றன.