ஹைதராபாத் திரையரங்கு ஒன்றில், பத்மாவத் படம் திரையிடப்பட்டிருந்தபோது 19 வயது இளம்பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன் முகநூல் மூலம் அறிமுகமான நபரின் அழைப்பை ஏற்று, பத்மாவத் படத்தைப் பார்க்க குறித்த இளம் பெண் சென்றிருக்கிறார்.

வேலை நாளாகையால் இரசிகர்கள் மிகச் சிலரே இருந்ததை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட சந்தேக நபர், இளம்பெண்ணை திரையரங்கில் வைத்தே வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இது குறித்து அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.

அந்தரங்க உறுப்புகளில் கடும் காயங்களுக்கு உள்ளான அந்தப் பெண், தற்போது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.