ஈரானில் உடை கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டமாக தலையில் அணியும் ஹிஜாப்பை நீக்கிய  29 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானில் 1979ஆம் ஆண்டு  நடந்த இஸ்லாமிய புரட்சியில் இருந்து வலுக்கட்டாயமாக்கப்பட்ட பெண்களுக்கான உடை கட்டுப்பாட்டிற்கு எதிராக போராடும் விதமாக தலையில் அணியும் ஹிஜாப்பை நீக்கி தெருக்களில் நடந்த  29  பெண்களை தெக்ரான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொது உத்தரவிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த 29 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.