இரு இராணுவ ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 

இச் சம்பவம் பிரான்ஸின் தென் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகொப்டர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இரு ஹெலிக்கொப்டர்களிலும் 6 பேர் பயணித்துள்ளதாகவும் இதுவரை 5 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாகவும் ஒருவரைத் தேடும் பணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.