பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை!!!

Published By: Digital Desk 7

02 Feb, 2018 | 11:09 AM
image

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சர்வதேச   ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கடும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று  தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் படித்த அணுசக்தி இயற்பியலாளரான டயஸ் பலார்ட், கியூப மாநில கவுன்சிலின் அறிவியல் ஆலோசகராகவும், கியூபா அறிவியல் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 68 வயதான டயஸ் பலார்ட், கடந்த பல மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, பின்னர் தொடர்ந்து வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுவந்த இவர், விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

கியூபாவை ஐந்து தசாப்த காலமாக ஆட்சி செய்துவந்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 2016ஆம் ஆண்டு தனது 90ஆவது வயதில் காலமானார். அவர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அவரது மகன் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளமை கியூப அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10