ஸ்பெயின் இளவரசியானார் 12 வயது சிறுமி!!!

Published By: Digital Desk 7

01 Feb, 2018 | 05:15 PM
image

ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் பிலிப்பின் 12 வயது மகள் லியோனார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர்தான் ஸ்பெயினின் வருங்கால அரசியாவார். 

ஸ்பெயின் நாட்டின் மன்னராக ஆறாம் பிலிப் உள்ளார். இவரது 50 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

அதையடுத்து மாட்ரிட் நகரில் மன்னர் குடும்பத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாட்ரிட் நகரில் உள்ள ராயல் பேலஸில் நடந்த இந்நிகழ்ச்சியில் மன்னர் ஆறாம் பிலிப் தனது மகள் லியோனாரை இளவரசியாக அறிவித்துள்ளார். 

இளவரசியாக அறிவிக்கப்படுவது அரச குடும்பத்தில் மிகப்பெரிய கௌரவமாகும்.

இளவரசியாக அறிவிக்கப்பட்ட 12 வயது சிறுமியான லியோனார் வருங்காலத்தில் ஸ்பெயின் நாட்டையே ஆட்சி செய்யும் ராணியாக செயல்படுவார்.

இளவரசியாக அறிவிக்கப்பட்ட தனது மகளுக்கு "கோல்டன் ஃபிளீஸ்" விருதையும் மன்னர் ஆறாம் பிலிப் வழங்கினார். இந்த கோல்டன் ஃபிளீஸ் விருது ஸ்பெயினின் மிக உயர்ந்த கௌரவமாகும்.

இனி சிறுமி லீயோனார் ஸ்பெயின் சிம்மாசனத்திற்குட்பட்டவர் ஆவார். இளவரசியாக அறிவிக்கப்பட்டதன் மூலம் லியோனார் ராணி ஆவதற்கான முதல் படியை எட்டியுள்ளார்.

நாட்டின் இளவரசியாக அறிவிக்கப்பட்டுள்ள லியோனார்க்கு அரச குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். அந்நாட்டு மக்களும் தங்களின் வருங்கால ராணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய மன்னர் ஆறாம் பிலிப்பின் சகோதரியான இளவரசி கிறிஸ்டினாவின் இளவரசி பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17