கூட்டு புத்துருவாக்கத்தை மேம்படுத்திவரும் புதிய DHL APIC புத்தாக்க நிலையம் 

Published By: Priyatharshan

11 Feb, 2016 | 11:00 AM
image

உலகின் முன்னணி சரக்கியல் வழங்குநரான DHL நிறுவனம், சரக்கியல் உலகின் தொலைநோக்கு பார்வையை வழங்கும் வகையிலும், விநியோக வலையமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய புத்தாக்க தீர்வுகளை விருத்தி செய்யும் வகையிலும் அண்மையில் சிங்கப்பூர் நகரில் அதன் ஆசிய பசுபிக் புத்தாக்க நிலையத்தை (APIC)அங்குரார்ப்பணம் செய்திருந்தது. 

பல மில்லியன் கணக்கு பெறுமதியான இந்த நிலையம் ஜேர்மனிக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் DHL’ இன் முதலாவது புத்தாக்க நிலையமாக உள்ளதுடன், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் புத்தமைவான சரக்கியல் சேவைகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதலாவது நிலையமாகவும் திகழ்கிறது. 160 மில்லியன் அமெரிக்க டொலர் (€104-மில்லியன்)  பெறுமதியான DHL விநியோக சங்கிலி மேம்படுத்தப்பட்ட பிராந்திய நிலையத்தின் கட்டிட வளாகமானது சிங்கப்பூரில் உள்ள டெம்பைன்ஸ் லொகிஸ் பூங்காவில் அமைந்துள்ளது. 

DHL நிறுவனத்தின் பிரதம வர்த்தக அதிகாரியான பில் மெஹல் கருத்து தெரிவிக்கையில், 

“எமது வளர்ந்துவரும் சந்தைகள் மூலமாக 2020 ஆம் ஆண்டளவில் DHL இன் உலகளாவிய வருவாயில் 30% இனை ஈட்டிக்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம். புதிய தொழில்நுட்பங்கள், செயல்முறைகள் மற்றும் உற்பத்திகள் ஊடாக எமது சேவைகளை சந்தைகளுக்கேற்ப வேறுபடுத்தி எமது நிலையான துறைசார் தலைமைத்துவத் தேவைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறோம். ஜேர்மனியிலுள்ள எமது முதலாவது நிலையத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புத்துருவாக்கத்தில் எமது தலைமைத்துவத்தை பேணும் வகையில் சிங்கப்பூர் APIC இன் அங்குரார்ப்பணம் அமைந்துள்ளது” என்றார். 

APIC ஆனது பிராந்தியத்தில் சரக்கியல் செயற்பாடுகளை மாற்றியமைக்கக்கூடிய எதிர்கால தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துகிறது. இதில் கிடங்கின் சட்டமன்ற தொடர்கள் மற்றும் உற்பத்தி தெரிவுக்கான “smart glasses”, அவசரமாக மருந்துப் பொருட்களை விநியோகிப்பதற்கான ஆளில்லா விமானங்கள், வாகனங்களின் பெறுமதியை 30%ஆல் மேம்படுத்திக் கொள்வதற்கான ‘இயந்திரத்திலிருந்து இயந்திரம்’ இனை பயன்படுத்தும் கேள்வி வாகனங்களின் பராமரிப்பு, விரைவான மற்றும் செயற்றிறன் மிக்க போக்குவரத்துக்கு ஓட்டுனரில்லா சிறுஊர்தி போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

புதிய சரக்கியல் போக்குகள் மற்றும் புத்துருவாக்க தீர்வுகளை வழங்குவதற்கு மேலதிகமாக, APIC ஆனது, DHL வாடிக்கையாளர்கள், துறைசார் பங்காளர்கள் மற்றும் சுயாதீன நிபுணர்கள் ஆகியோருக்கிடையே புத்துருவாக்க ஒன்றிணைவுக்கான பிராந்திய களத்தை அமைத்துக்கொடுத்து வருகிறது. இந்த நிலையமானது DHL இன் போக்குகள் தொடர்பான ஆய்வு முயற்சிகளை ஆசிய சரக்கியல் மற்றும் பொருளாதார செயற்பாட்டு போக்குகள் மீது கவனம் செலுத்த செய்கிறது.

EDB இன் சரக்கியல் மற்றும் இயற்கை வளங்கள் பிரிவின் பணிப்பாளர் லீ எங் கெட் கருத்து தெரிவிக்கையில், 

“APIC இன் அங்குரார்ப்பணம் என்பது உலகளாவிய விநியோக சங்கிலி தீர்வுகளின் சாம்ராஜ்ஜியத்தில் சிங்கப்பூரின் பங்குக்கு வலுச்சேர்க்கும் மற்றுமொரு மிக முக்கிய கட்டமாக அமைந்துள்ளது. மூலோபாய பங்காளராக பயணத்தை தொடரும் DHL, ஆற்றல்மிகு விநியோக சங்கிலி பரப்பு மற்றும் தொழில்நுட்பம் ஊடாக வழங்கப்படும் வாய்ப்புகளை மேம்படுத்தவும், தேவைகளை பூர்த்தி செய்வதற்குமான உகந்த ஸ்தானத்தில் சிங்கப்பூர் உள்ளது. உலகின் முன்னணி சரக்கியல் கேந்திர நிலையம் என்ற சிங்கப்பூரின் ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்” என்றார்.

APIC நிலையத்தின் மூலம் தற்போது புத்தாக்க நிலைய சுற்றுலாக்கள், புத்துருவாக்க செயலமர்வுகள், நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் என பலதரப்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது. APIC இன் கண்காட்சியில் தன்னியக்கம் மற்றும் எதிர்கால ரோபோக்கள், பொதி லொக்கர்கள், குரல் மற்றும் ஒலி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில்நுட்ப சாதனம் மற்றும் கிடங்கிலிருந்து பெற்றுக்கொள்ளல் மற்றும் பொதியிடல் போன்ற Deutsche Post DHL குழுமத்தின் முழுமையான தெரிவுகளின் அனுபவத்தை பார்வையாளருக்கு வழங்கல், சரக்கியல் துறையின் எதிர்கால போக்குகள் மற்றும் அதன் பயன்பாடுகளை சுட்டிக்காட்டும் வரைபடங்கள் மற்றும் 2050ஆம் ஆண்டளவில் சரக்கியல் உலகம் எவ்வாறான தோற்றத்தை கொண்டிருக்கும் என்பது போன்ற காட்சியமைப்பு சுவர் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆசிய பசுபிக் பிராந்திய DHL இன் புத்தாக்க, தீர்வு விநியோகம் மற்றும் சேவை முகாமைத்துவ பிரிவின் உப தலைவர் பாங் மீ யெ தெரிவித்ததாவது, 

“சரக்கியல் துறையில் புத்துருவாக்க முன்னோடியாவதற்கான இலக்கின் ஒருங்கிணைந்த பகுதியாக APIC காணப்படுகிறது.  சிங்கப்பூரிலுள்ள இந்த நிலையம் ஆசிய சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், வாடிக்கையாளர்களின் வாழ்வை சௌகரியப்படுத்தும் வகையிலான நிலையான தீர்வுகளை வழங்கும் எமது வாடிக்கையாளர் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது. ஆய்வு, பரிசோதனைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு தளத்தை வழங்குவதற்கு மேலதிகமாக, எமது வாடிக்கையாளர்களின் வெற்றிக்கு பெறுமதி சேர்க்கும் வாடிக்கையாளர் மையப்படுத்திய புத்தாக்கங்களையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

மிக வெற்றிகரமானதும், இந்த வருடத்தின் முற்பகுதியில் மீள் அறிமுகம் செய்யப்பட்ட ஜேர்மனியில் உள்ள முதலாவது புத்தாக்க நிலையத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த சிங்கப்பூர் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. 

ஆசிய பசுபிக் சந்தைகளுக்கு இரண்டாம் நிலை வாடிக்கையாளர் மையப்படுத்திய புத்துருவாக்க தளத்தை வழங்குவதற்கு மேலதிகமாக, APIC ஆனது ஆசிய பசுபிக் சந்தைகளில் பகுப்பாய்வுகள், இலத்திரனியல் வர்த்தகம் மற்றும் தீர்வுகள் மீதும் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58