கஹட்டகஸ்திகிலியவில், 24 வயதே நிறைந்த இளம் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற முன்னாள் இராணுவ வீரரைத் தேடி பொலிஸார் வலை வீசியுள்ளனர்.

குறித்த நபர் இராணுவத்தில் பணியாற்றியபின், இராணுவத்தை விட்டுத் தப்பியோடியவராவார். அவரது மனைவிக்கும் அவருக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இருவருக்கும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், மனைவி வாழ்ந்து வந்த வீட்டுக்கு அருகாமையில் ஒளிந்திருந்த சந்தேக நபர், மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.

இத்தாக்குதலில் காயமடைந்த அவரது மனைவியை அயலவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவரது நிலை கவலைக்கிடமாகவே, அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.