விமா­னத்தில் சக பயணி மீது சிறு­நீரைக் கழித்த நபர்

Published By: Robert

11 Feb, 2016 | 11:05 AM
image

அல்­ஜீ­ரிய தலை­நகர் அல்­ஜி­யர்­ஸி­லி­ருந்து பிரான்ஸின் பாரிஸ் நகரை நோக்கிப் பய­ணித்த விமா­னத்தில் பய­ணி­யொ­ருவர் பிறி­தொரு பயணி மீது சிறுநீர் கழித்­த­தை­ய­டுத்து கடும் மோதல் இடம்­பெற்­றுள்­ளது.

திங்­கட்­கி­ழமை மாலை இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்­கள் புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

பாரிஸை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் எம்.எல்.2673 விமானம் 166 பய­ணி­க­ளுடன் நடு­வானில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த போது, குறிப்­பிட்ட மேலாடை அணி­யாது காணப்­பட்ட பயணி மது அருந்­தவும் சிகரெட் புகைக்­கவும் தனக்கு அனு­ம­தியளிக்­கப்­ப­டா­ததால் சினம­டைந்து விமான ஊழி­யர்­க­ளிடம் தர்க்­கத்தில் ஈடு­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் அந்த நபர் சக பயணி மீது சிறு­நீரைக் கழிக்­கவும் அங்கு பெரும் பதற்­ற­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அவரை மடக்கிப் பிடிக்க விமான ஊழி­யர்கள் பெரும் போராட்­டத்தை எதிர்­கொள்ள நேர்ந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து அந்த விமானம் திசை திருப்­பப்­பட்டு லையன் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்­ட­து.

தொடர்ந்து அங்கு வந்த பொலி­ஸாரால் சிறு­நீரைக் கழித்த நபரும் பிறி­தொ­ரு­வரும் கைது­செய்­யப்­பட்டு அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.

அந்த விமா­னத்தில் பய­ணித்த பயணிகள் 3 மணித்தியால நேர தாமதத்தை எதிர்கொண்டு பாரிஸ் நகரிலுள்ள சார்ள்ஸ் டி கோலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right