உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.

New World Wealth  எனும் நிறுவனத்தின் அறிக்கைப்படி 2017ம் ஆண்டுக்கான பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அந் நிறுவனத்தின் ஆய்வறிக்கைப் படி முதல் பத்து இடங்களில் முறையே அமெரிக்கா, சீனா , ஜப்பான், பிரித்தானியா, ஜேர்மனி, இந்தியா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா மற்றும்  இத்தாலி ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன.