கம்பளையில் இருந்து நுவரெலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவ, மாணவியர் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை சுமார் ஏழரை மணியளவில் இடம்பெற்றதாகவும் விபத்து நிகழ்ந்தபோது பேருந்தில் 25 பயணிகள் பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் நான்கு மாணவர்கள் தவிர நான்கு வயதுக் குழந்தையும் அடங்கும்.

காயமடைந்தவர்கள் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிக வேகமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.