எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எழுத்து மூலம் விடுமுறை கோரும் சகல ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். 

விடுமுறையின் கால எல்லை சேவை தளத்திற்கும் வாக்களிப்பு நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிப்பது அவசியமாகும்.

இதேவேளை, தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அல்லது தனிப்பட்ட விடுமுறையில் இழப்பின்றி இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.