விஜய் அண்டனி நடிப்பில் உருவாகி வரும் காளி படத்தின் படபிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. 

காளி படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை தன்னுடைய வலைதளத்தில் இலவசமாக பதிவேற்றிய விஜய் அண்டனி, இந்த பாடல் அபரிமிதமான வெற்றியைப் பெற்றிருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார்.

அண்ணாதுரை பட வெளியீட்டின் போது விநியோகதஸ்தரான அன்புசெழியனுக்கு ஆதரவாக இருந்தது குறித்து அவரிடம் பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் காளி படத்தின் வெளியிட்டிற்கு அவருக்கு அளித்த ஆதரவு கைக்கொடுக்கும் என்று நம்பியிருக்கிறார் விஜய் அண்டனி.

அதனால் காளி எந்த வித சிக்கலும் இல்லாமல் வெளியாகும் என்கிறார்கள் விடயமறிந்தவர்கள். இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் காதல் தினமான பிப்ரவரி 14  ஆம் திகதியன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இதில் விஜய் அண்டனிக்கு ஜோடியாக அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத் என நான்கு நடிகைகள் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்