பௌத்த தேரர்களை உசுப்பேற்றி இன ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி

Published By: Robert

11 Feb, 2016 | 10:51 AM
image

அதி­கா­ரத்தை கைப்­பற்­றிக்­கொள்­வ­தற்­காக பௌத்த தேரர்­களை உசுப்­பேற்றி இன ஒற்­று­மையை சீர்­கு­லைக்க மஹிந்த ராஜபக் ஷ முயற்­சிக்­கிறார் என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்சி தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து அவர் கூறு­கையில்,

அதி­கா­ரத்தில் இருந்து பழ­கிப்­போன மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு அதி­காரம் இல்­லாமல் போன­ நிலையில் எவ்­வா­ற­ாவது அதி­கா­ரத்தைக் கைப்­பற்ற வேண்டும் என்­ப­தற்­காக இன ஒற்­று­மையை சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்றார். குறிப்­பாக ராவ­ணா­ப­லய, சிங்­ஹலே என பௌத்த தேரர்­களை உள்­ள­டக்­கிய அமைப்­பு­களை உரு­வாக்கி இன ஒற்­று­மையை சீர்­கு­லைக்க முயற்­சிக்­கின்றார்.

மஹிந்­த ­ரா­ஜபக் ஷ இரண்­டா­வது தட­வை­யா­கவும் அதி­கா­ரத்­துக்கு வந்­த­வுடன் 18ஆவது திருத்­தத்தை கொண்­டு­வந்து 3ஆவது தட­வை­யா­கவும் அதி­கா­ரத்­துக்கு வரும் வகையில் சட்­டத்தை மாற்­றி­ய­மைத்தார். அவ­ருக்கு எந்­த­ள­வுக்கு அதி­கார மோகம் இருந்­த­தென்றால், தனது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு மேலும் ஒரு­

வரு­ட­காலம் இருக்கும் நிலையில் தேர்­தலை நடத்தி தனது பத­வியை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முற்­பட்டார். ஆனால் மக்கள் அதற்கு இட­ம­ளிக்கவில்லை.

ஆனால் மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­விக்கு வந்­த­வுடன் 19ஆவது திருத்­தச்­சட்­டத்தை கொண்­டு­வந்து நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­மற்­செய்து பாரா­ளு­மன்­றத்­துக்கு கூடு­த­லான அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்தார். அத்­துடன் சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தேவை­யான தீர்­வு­களைப் பெற்றுக் கொடுத்து வரு­கிறார். இதன் கார­ண­மாக சர்­வ­தே­சத்­துக்கும் எமது நாடு­மீது நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருக்­கும்­போது நீதி­மன்­றங்கள் சுயா­தீ­ன­மாக இயங்க முடி­ய­வில்லை. சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரத்தை தனக்­குக்கீழ் மஹிந்த எடுத்துக் கொண்டார். இன்றும் அவர் ஜனா­தி­பதி போன்றே செயற்­பட்டு வரு­கின்றார். நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை கேள்­விக்­குட்­படுத்தி வரு­கின்றார்.

கடந்த ஆட்­சியில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­களை நிறுத்தி குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­ட­னையை பெற்­றுக்­கொ­டுக்­கவே மக்கள் எமக்கு அதி­கா­ரத்தை வழங்­கி­னார்கள். 2010ஆம் ஆண்­டு­முதல் 2015 ஜன­வரி 8ஆம் திகதி வரை இருந்­து­வந்த வீண்­வி­ர­யங்கள் தற்­போது இல்­லாமல் செய்­யப்­பட்­டுள்­ளன.

கடற்­படை அதி­கா­ரி­யாக இருக்கும் ஒரு­வ­ருக்கு தனியார் தொலைக்­காட்சி நிறு­வனம் அமைப்­ப­தற்கு எவ்­வாறு முடிந்­தது என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது. இதற்­கா­கவா அவர் தனது மகனை இரா­ணு­வத்­துக்கு வழங்­கினார் என்று கேட்­கின்றோம். குற்­ற­மி­ழைத்­த­வர்கள் அனை­வரும் விசா­ரிக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். இது தொடர்­பான விசா­ர­ணைகள் மந்­த­க­தி­யி­லேயே நடை­பெ­று­கின்­றன. ஒரு­வரை கைது­செய்து சிறை­யி­லடைத்­ததன் மூலம் இது முடி­வ­டை­வ­தில்லை. அதே­போன்று லசந்த விக்­ர­ம­துங்க, எக்­னெ­லி­கொட மற்றும் தாஜுதீன் கொலைகள் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் தொட­ர­வேண்டும்.

ஆனால் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இணைந்து மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக சர்­வ­தேசம் எங்­கள்­மீது நம்­பிக்கை வைத்து வரு­கின்­றது. அதன் கார­ண­மா­கவே சவூ­தியில் எமது பெண்­ணொ­ரு­வ­ருக்கு கல்­லெ­றிந்து கொலை செய்வதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் அவரது தண்டனை குறைக்கப்பட்டது.

எனவே பௌத்த தேரர்களை ஏவி சகல இன மக்களும் ஒற்றுமையாக இருப்பதை சீர்குலைத்து விட்டு மீண்டும் அதிகாரத்துக்குவர முயற்சிக்கும் மஹிந்த­வின் நடவடிக்கையானது நாட்டில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படுவதற்கே வழியமைக்கப்படும். அத்துடன் சர்வ­தேசத்திலும் எமக்கு அபகீர்த்தியே ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13