மாத்தளையில், உணவகங்களுக்கு வினியோகிக்கவென வனவிலங்குகளை வேட்டையாடிய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மான், காட்டுப் பன்றி உட்பட மிருகங்களை வேட்டையாடப் புறப்பட்ட நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இதுபோன்ற வேட்டைகளை நடத்தி வந்த சந்தேக நபர், மாத்தளை மற்றும் தம்புள்ளை பகுதிகளில் இயங்கிவரும் உணவகங்களில் அவற்றை விற்பனை செய்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.