சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட இரண்டு மணித்தியாலங்களே உயிர்வாழ்ந்த சிசு பரிதாபமாக உயிரிழந்தது.

தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் - கல்பனா தம்பதியர் தமது குழந்தையின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கல்பனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பிரசவம் இடம்பெற்றபோதும் குழந்தையின் சுவாச ஓட்டத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, குழந்தையைக் காப்பாற்றுமுகமாக யாழ் மருத்துவமனைக்கு குழந்தை எடுத்து வரப்பட்டது. எனினும், எவ்வித பலனுமின்றி, குழந்தை உயிரிழந்தது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் சோக வெள்ளத்தில் மூழ்ந்துள்ளது.