யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அன்டன் உதயராஜா டிலக்ஸி (22) என்ற இந்தப் பெண் திருமணமானவர்.

சம்பவம் இடம்பெற்ற தினமான இன்று காலை, தனது கணவரும் பெற்றோரும் கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் இவர் மட்டும் வீட்டில் தனித்திருந்துள்ளார்.

வெளியே சென்றிருந்தவர்கள் வீடு வந்து பார்த்தபோது, டிலக்ஸி இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

அதேசமயம், அவர்களது வீடு கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும் அவர்கள் கவனித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவம் குறித்து பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

வீட்டைக் கொள்ளையடிக்கும் நோக்கில் வீடு புகுந்த மர்ம நபர்கள், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான டிலக்ஸியைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.