'புலி ' திரைப்­பட பாடல் வெளி­யீட்டு விழா­வுக்கு பின்னர் தான் தொடர்ந்து மன உளைச்­ச­லுக்­குள்­ளா­ன­தாக நடி­கரும் இயக்­கு­ன­ரு­மான டி. ராஜேந்தர் தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, புலி' பட இசை விழா வெளி­யீட்டுக்கு பிறகு எந்த விழா­விலும் கலந்து கொள்ள கூடாது என்று நானி­ருந்தேன். ஆனால், எனக்கு 'புலி' என்ற வார்த்தை மிகவும் பிடித்­த­மான ஒன்று. ஈழத்­த­மி­ழர்கள் மீது மிகுந்த பற்று வைத்­தி­ருப்­பவன். அந்த வகை­யிலும்' புலி 'எனக்கு பிடிக்கும். இலங்கை தமிழர் விவ­கா­ரத்­திற்­காக எனது பத­வியை கூட இரா­ஜி­னாமா செய்­துள்ளேன்.

அந்­த­ள­வுக்கு நான் பிழைக்கத் தெரி­யாமல் இருந்­துள்ளேன். அத­னால்தான் 'புலி' 'புலி' என்று தொடர்ச்­சி­யாக பேசினேன். அதை தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பிய பிறகு, யார் யாரெல்லாம் எப்­ப­டி­யெல்லாம் பார்த்­தார்கள், கிண்­ட­ல­டித்­தார்கள் என்­பது அந்த கட­வு­ளுக்­குத்தான் தெரியும். அந்த நிகழ்­வுக்கு பின் நான் கடும் மன உளைச்­ச­லுக்­குள்­ளானேன். அதன் பின்னர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்றார்.