வானில் இன்று தோன்றும் அபூர்வம் 

Published By: Priyatharshan

31 Jan, 2018 | 07:37 AM
image

கடந்த 1866 ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக முழு வட்ட சந்திரனையும், பூரண சந்திர கிரகணத்தையும் இன்று புதன்கிழமை தென்படும் பௌர்ணமி தினத்தன்று இலங்கை மக்கள் அவதானிக்கலாம். 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சந்தன ஜயரட்ன இதுதொடர்பில் தெரிவிக்கையில்,

 நீல நிலவு என்றழைக்கப்படும் இந்த சந்திரனை எந்த தடங்கலும் இன்றி முழுமையாக இலங்கையிலுள்ளவர்களுக்கு காணக் கிடைக்கின்றமை சிறப்பம்சமாகும். 

ஏனைய பௌர்ணமி தினங்களை விட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் வெளிச்சமாகவும் இந்த சந்திரன் தென்படும். 

சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வருகின்றமையே இதற்கான காரணமாகும். இன்றைய பௌர்ணமி நிலவில் 3 விசேட அம்சங்கள் உள்ளன.

சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் அதனை சுப்பர்மூன் என அழைக்கப்படுகின்றது. அத்துடன், சுப்பர் மூன் ஏற்படும் சமயத்திலேயே சந்திர கிரகணமும் நிகழ்கின்றது.

இதனால் சந்திரன் சிவப்பு நிறத்திலும் தோற்றமளிக்கும் என்பதால் அதனை 'இரத்த நிலா'எனவும் அழைக்கப்படுகிறது.

இதேவேளை, ஒரே மாதத்தில் ஏற்படும் இரண்டாவது பௌர்ணமி என்பதால், அது நீலநிலா எனவும் அழைக்கப்படுகிறது.

கடந்த 1866 ஆம் ஆண்டுக்கு பின்னர், இவ்வாறு 3 அம்சங்கள் ஒரே தடவவையில் வருவது இதுவே முதல் தடவை எனத் தெரிவித்தார்.

இந்த சந்திர கிரகணம் ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் வடமெரிக்காவின் பல பகுதிகளில் வாழும் மக்கள் அவதானிக்கலாம்.

குறித்த கிரகணம் பிற்பகல் 4.21 இற்கு தென்படும். பூரண சந்திர கிரகணம் மாலை 6.22 முதல் 7.38 வரை தென்படும். இரவு 7.31 முதல் 8.41 வரை பாதியளவில் சந்திரன் தென்படவுள்ளது. இரவு 9.31 இற்கு சந்திர கிரகணம் நிறைவடையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right