யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள பாழடைந்த வயல் கிணறொன்றிலிருந்தே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்டவற்றில் ரி.56 துப்பாக்கிக்கு பயன்படும் ரவைகள் ஒரு தொகையும் அவற்றோடு 60 மில்லி மீற்றர் நீளமான மோட்டார் குண்டுகள் சிலவும், ஆர்.பி.ஜீ குண்டு ஒன்றும் மற்றும் ரொக்கட் லோன்ஜர் வகை சார்ந்த குண்டுகளும் மீட்கப்பட்டிருந்ததாக பொலஸார் தெரவித்தனர்.

பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் குறித்த கிணற்றிலிருந்து ஆயுதங்களை மீட்டுள்ளனர்.