2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான இ20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதை, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, பெண்களுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரையிலும் ஆண்களுக்கான தொடர் அதே ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையும் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முதலாவது உலகக் கிண்ண இ20 போட்டித் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் எட்டு நகரங்களில் உள்ள பதின்மூன்று விளையாட்டு அரங்கங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.