நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து மீயுயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி தேர்தல் குறித்து ஐக்கிய தேசிய முன்னணி தாக்கல் செய்த மனுவொன்றை ஆராய்ந்ததன் பின்னரே இத்தடையுத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக நடைபெற்ற சில விடயங்களைச் சுட்டிக் காட்டி ஐக்கிய தேசிய முன்னணியே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீதான தீர்ப்பொன்றை வழங்கும் வரையில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த மீயுயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.