(எம்.மனோசித்ரா)

நல்லிணக்கம்  ஏற்படுத்துவதாக்க கூறி நாட்டில் இனவாத்தை தூண்டி விட்டுகின்றனர்.  அரசியல் தேவைகளுக்காக மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர்   என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , நாட்டில் சமத்துவம் பேணப்பட வேண்டும் எனக் கூறிக் பெண்களை இரவில் மதுபான விற்பனை வேலை செய்வதற்கும் மது அருந்துவதற்குமே நல்லாட்சி அரசாங்கம் சந்தர்ப்பம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Image result for மஹிந்த ராஜபக்ஷ virakesari

உள்நாட்டில் தற்போது என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரு புறம் ஜனாதிபதி பிரதமரை திருடன் என்கிறார் அதே வேளை மறு புறம் ஜனாதிபதியை பிரதமரின் கையாட்கள் திருடர் என்கின்றனர். ஆனால் நாட்டை ஆட்சி செய்வது இவர்கள் இருவரும் இணைந்து தான். அப்படியென்றால் ஆட்சி செய்யும் அனைவருமே திருடர்கள் தானே? 

இதேவேளை அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மோசடியில் ஈடுபடுவதாக ஜனாதிபதி  கூறுகின்றார். அமைச்சரவையின் தலைவர் ஜனாதிபதி என்ற வகையில் மோசடிகளில் அமைச்சர்கள் ஈடுபடுகின்றார் என்றால் ஜனாதிபதியும் இணைந்து அதனை செய்கின்றார் என்று தான் அர்த்தம். அப்படியென்றால் முழு அரசாங்கமுமே கொள்ளையர்கள் தான் எனவும் தெரிவித்தார். 

மத்துகமவில் நேற்று  இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.