மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ‍ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் மீதான விவாதத்திகதி இறுதி செய்யப்படாது கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் இன்று 12 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

கூட்டத்திற்கான அறிவிப்பு பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நண்பகல் வேளையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ‍ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் மீதான விவாதத்திகதி இறுதி செய்யப்படாது நிறைவடைந்துள்ளது.

சபை முதல்வரும் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்தை நடத்த முடியாதென தெரிவித்திருந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்தை வைக்குமாறு தெரிவித்துள்ளன.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளின் வேண்டுதல்களுக்கு தலைசாய்த்தவாறு கூட்டத்தில் பங்கேற்றுள்ளது.

இதையடுத்து, சபாநாயகர் கருஜயசூரிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின்னர் விவாதம் தொடர்பான திகதியை அறிவிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி ஆணைக்குழு அறிக்கைகள் மீதான விவாதம் இடம்பெற்றால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுமென தேர்தல் ஆணைக்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.