வவுனியா புகையிர வீதியில் இன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமண்காட்டு சந்தியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த வேன் வைரவப்புளியங்குளம் பகுதியில்  வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே வீதியில் வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.