இலங்கையின் 70 ஆவது  தேசிய சுதந்திர தின வைபவத்தை உலகிலுள்ள 118 நாடுகளில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுரக அலுவலகங்கள் மற்றும் நாடுகளிலுள்ள இலங்கையர்களின் அமைப்புக்கள் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் இலங்கையில் நடைபெறவுள்ள 70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.