இலங்கை அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க மற் றும் ஊழல் ஒழிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்காக 31 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை ஒது க்கும் யோச­னையை அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் நிர்­வாகம் முன்­வைத்­துள்­ளது.

அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லா­ளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்­கி­ரஸுக்கு அனுப்­பி­வைத்­துள்ள வர­வு­ – செ­லவுத்­திட்ட யோச­னை­யி­லேயே இது குறித்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­ப­தித் ­தேர்தல் மற்றும் பொதுத்­தேர்­த­லின் பின்னர் இடம்­பெற்ற வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த மாற்­றங்­க­ளுக்கு பின்னர் இலங்­கைக்­கான அமெ­ரிக்க உதவி புதிய யுகத்தில் நுழைந்­துள்­ள­தாக அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது

இவ்­வ­ருடம் ஒக்­டோபர் மாதம் முதலாம் திகதியுடன் ஆரம்பமாகும் ஒருவருட காலப் பகுதிக்கான நிதியுதவி குறித்த யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது.