அயர்லாந்தில் நீண்டகாலமாக அமுலிலுள்ள கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

 எதிர்வரும் மே மாதம் இதற்கான வாக்கெடுப்பை நடத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்படுமெனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் தற்போது கருக்கலைப்புச் செய்தல் சட்டவிரோதமாக உள்ளது. இருப்பினும், கருவைச் சுமக்கும் பெண்ணின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் இருந்தால் மாத்திரம், அந்நாட்டில் கருக்கலைப்புச் செய்ய அனுமதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.