இலங்கை தேயிலையின்  தரம் குறித்து ஆராய்வதற்காக ரஷ்யாவிலிருந்து விஷேட குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நான்கு பேர் கொண்ட இந்தக் குழு பெப்ரவரி மாதம் இலங்கை வரவுள்ளதாக அமைச்சர்  மேலும் தெரிவித்துள்ளார்.  

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இக்குழுவில்  ரஷ்ய அரசாங்கத்தின் தாவர பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகள் உள்ளடக்கப்ட்டுள்ளனர். இவ்வதிகாரிகள் கொண்ட குழு   இலங்கையிலுள்ள துறைசார் அதிகாரிகளை சந்தித்து இலங்கை தேயிலையின் தரம் தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்கையில் இருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையில் கெப்ரா எனப்படும் வண்டு இருந்ததாக தெரிவித்து ரஷ்ய அரசாங்கம் இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதிக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. எனினும்   இலங்கையிலிருந்து ரஷ்யா  சென்ற பல்வேறு பிரதிநிதிகள் மற்றும் அந்நாட்டு பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மற்றும்   இலங்கையைச் சேர்ந்த தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினரின் மதிப்பீடு போன்வற்றின் பின் குறித்த  இடைக்கால தடை நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.