(எம்.மனோசித்ரா)

நடைபெறவிருக்கும் உள்ளளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தீபிகா உடகம தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுடன் சம்பந்தப்பட்ட உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விஷேட மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

இம்மையமானது விஷேடமாக பெண் வேட்பாளர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தும்.

இதற்காக 24 மணித்தியால துரித தொலைபேசி அழைப்பு சேவை செயற்படுத்தப்பட்டுள்ளது. 

077-3088135  மற்றும் 077-3762112 ஆகிய தொலைபேசி இலங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். 

இதே வேளை 011-2505574 என்ற தொலைநகல் இலக்கத்தின் மூலமாகவும் www.iihrcsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.