இருமல், தொண்டைக்கரப்பான் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் EUGICA CANDY எனும் மூலிகைமருந்தினால் முற்றாக குணமடையமுடியும். EUGICA CANDY யில் அடங்கி உள்ள நீலகிரித் தைலம், இஞ்சி, கறுவா, Menthol & Coleus Aromaticus ஆகியன தொண்டையில் ஏற்படும் வலியை ஆற்றி மூக்கில் உண்டாகும் சளியை கரைத்து அகற்றி விடுவதுடன் இருமலையும் குரலின் கரகரப்பு தன்மையையும் பாதுகாப்பாக பயன்விளைவுடன் குறைத்து விடுகிறது.

தடுமனும் இருமலும் சூழலில் உள்ள வைரஸ்களினாலும், தூசு, குளிரான காலநிலை, சிகரெட்புகை அல்லது ஏற்கெனவே தடுமன், இருமலால் பாதிக்கப்பட்டோரிடமிருந்தும் தொற்றிக் கொள்ளும் பரவலாக காணப்படும் பிரச்சினைகளாகும். தடுமன், இருமல், தொண்டைக்கரப்பான் அவற்றை அனுபவிப்போருக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன் ஒருவரது செயற்பாடுகளையும் பெறுபேறுகளையும் குன்றச் செய்கிறது. EUGICA CANDY இக்குறைபாடுகளை நீக்கி துரித நிவாரணத்தை தருவதால் உங்களால் உங்கள் நாளாந்த வேலைகளை சுலபமாக செய்ய முடியும்.

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அறிமுக வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வைத்திய கலாநிதி ஆர்.எஸ். ஜயவர்தன,

“EUGICA CANDYஇல் நீண்டகால வரலாற்றை கொண்ட இயற்கை சேர்மானங்களும் பல்வேறு நிரூபிக்கப்பட்ட அனுகூலங்களும் அடங்கியிருப்பது அதன் சிறப்பம்சங்களாகும்” என்று கூறினார். 

பார்வையாளர்கள் முன்னிலையில் அதனை பரீட்சித்து அது சிறந்த சுவையைத் தருவதாகவும் அவர் கூறினார். ஒரு நாளைக்கு ஆகக் கூடுதலாக 20 படிகங்களை உட்கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள் பாவிப்பதற்கு முன் அவர்களது வைத்தியரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். நீரிழிவு நோயாளர்களும் அவதானத்துடனேயே இம்மருந்தை பயன்படுத்த வேண்டும்.

EUGICA CANDY யின் உரிமையளரும் அறிமுக வைபவத்தை ஏற்பாடு செய்தவருமான றுக்ஷன் பண்டார கருத்து தெரிவிக்கையில்,

பாவிப்பதற்கு இம்மருந்து மிகவும் ஆர்வத்தை கொடுக்கிறது என்றும் 6 வயதிற்கு மேற்பட்டவர்கள் பாவிக்கலாம் என்றும் ஒரு படிகம் 10 ரூபாவாக கட்டுபடியான விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

அறிமுக விழாவுக்கு அழைக்கப்பட்ட வாடிக்கயாளர்களும் வியாபார பங்காளர்களும் மேற்படி உற்பத்தியையும் இத்தகைய புத்தாக்க உற்பத்தியான EUGICA CANDY இலங்கையில் புதுவருடத்தில் அறிமுகம் செய்துள்ள Mega Lifesciences நிறுவனத்தின் முயற்சியையும் பாராட்டினார்கள்.

உற்பத்தியின் சுவையை அவர்கள் பாராட்டியதுடன் அது வாயையும் சுத்தம் செய்து புத்துணர்வைக் கொடுப்பதாகவும் சிலர் தெரிவித்தனர். EUGICA CANDY இனால் தங்கள் தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் கிடைத்ததாக பலர் தெரிவித்தனர்.

Mega Lifesciences இலங்கையிலுள்ள அதன் அன்பான வாடிக்கையாளர்கள் சகலருக்கும் EUGICA

CANDY ஐ அறிமுகம் செய்ததில் பெருமையடைகிறது. தடுமன், இருமல் தொண்டை கரப்பான் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டுபடியான இவ்இயற்கை முலிகை மருந்தினால் பெரிதும் நன்மை அடைவார்கள். சகல முன்னணி மருந்தகங்கள். சுப்பர் மார்கட்டுகள், குறிப்பிட்ட சில சில்லறை கடைகள் ஆகியவற்றில் EUGICA CANDY கிடைக்கும். 1897ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் செயற்பட்டு வரும் சுவிஸ் கம்பனியான A.Baur & Co Pvt Ltd இம்மருந்தை இறக்குமதிசெய்து விநியோகித்து வருகிறது.